வெள்ளி, 13 மே, 2022

துளிக் கறுமை

 


உதட்டோரம் கசிந்த 

சிரிப்பு நழுவி 

கன்னக் குளத்தில் 

விழுந்ததும் 


சுட்டு விரல் 

கொண்டு கண்ணடி

கறுமைத் தொட்டு 

கலந்ததில் 


பேனா முனைத் 

தொட்டெழுதிய 

எழுத்துக்களுக்கும் 

கிறுக்குப் பிடித்து 


இடமாறி இடறி 

சொல்லும் பொருளும் 

அவளதரமும் அதன் 

நகையுமாகி 

நாம சங்கீர்த்தனமாகியது 


அக்கருமை

கனந்தாங்காது  

காகிதத்துக்கும் 

மயக்கம் வந்து 

கன மேசையடியில் 

கிடத்திய 


பின் 

தரணி 

தலை 

சுற்றியது  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக