புதன், 11 மே, 2022

சொல்லாளம்

 


சொல்லின் செயல்முன் 

சொல் வந்து 

பல்பட்ட நா 

பதம் பார்த்தது 

நெஞ்சை 


அன்பைச் சொரியும்

அதே கண்கள் 

அவள் சொல்கேட்டு

அனல் கொண்டு 

தீக்கங்கானது 


கேட்ட கேள்விகளுக்கு 

பதிலற்று 

தலை கொணர்ந்த 

பிராணி போல் 

யாக்கையது யடித்தது 


விட்ட பதில்கள் யாவும்  

விடையளிக்க இயலாத 

மற்றுமொரு வினாவோடு 

விரைந்து வந்து

கோபத்துக்கு 

வேகமூட்டியது  


உள்ளூர ரத்தமெல்லாம் 

உச்சந்தலையேறி 

உரக்க கத்த 

யோசித்து 


தன் தவறின் 

நீட்சியான 

அச்சொல்லை 

த(க)ண்ணீரில் 

கரைக்க 

முற்படுகிறேன் 


ஏனெனில் 

வேதனைகளின் 

உச்சமாயினும் 

தேவதைகளில் 

மிச்சமுமவளே 

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக