பள்ளி வருமுன்
பஞ்சரானது
புது சைக்கிள்
வகுப்பு வாசலில்
தடுக்கி
விழுந்தேன்
வந்த பின்
முதல் பெஞ்சில்
அமர்த்தப்பட்டேன்
கரும்பலகை
அழிக்க
கட்டளையிடப்பட்டேன்
அதீத வெயிலால்
அன்று மதிய
சோறும் கெட்டது
பச்சத் தண்ணீரும்
சூடாக
உள்ளிறங்கியது
பசிதூக்கத்தில்
வீழ்ந்ததால்
உரைநடை
உரக்கப் படிக்க
உத்தரவிடப்பட்டேன்
கடைசி
பீ.டீ பீரியடும்
கணக்கு வாத்தியருகே
கடனளிக்கப்பட்டது
இவ்வனைத்து
துர் சம்பவங்களின்
துயர காரணம்
வருகைப் பதிவேட்டில்
அவள்
வாரா நாட்களே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக