காலையில் கதிரவனைப் பார்த்து
கண்டித்து கொண்டிருந்தாள்..
ஏன் என்று கேட்டேன் ?
இரவில் யாருமில்லை
என்பதை யறிந்து
நட்சத்திரங்களை திருடிச்
சென்று விட்டது
இந்த சூரியன்
என்றாள்
கோபமாக !
அதற்கு தக்க தண்டனை
வழங்க வேண்டும்
மீண்டும் செய்யாதிருக்க..
என்ன தண்டனை ?
உச்சிப் பொழுதில்
கருமேகங்கள்
இச்சூரியனை சிறை பிடிக்க
ஆணையிடுகிறேன்
என்றாள்
அரசி போல்..
அதிர்ந்து சிரித்துவிட்டு
அலுவலகத்துக்கு சென்று
அரை நாள்
ஆனா பின்பு ,
அவள் சொன்னதை
உணர்ந்த மேகங்கள்
போல்
சூரியனை மறைத்தன்
மாயம் என்னவோ!
பெரியவர்களாகி
தள்ளிகொண்டே போகின்றோம்
இளந் தளிர்களிடமிருந்தும்
இயற்கைடயிமிருந்தும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக