மாத்திரை வாங்கி
வரச்சொன்னால் மறந்து
விட்டேனென்று மல்லிகை
மறவாது வாங்கிவருவான்
பாழாய்ப் போன
சர்க்கரை வியாதியால்
நேரத்துக்கு சாப்பாடு
கேட்டால் 'தொரை'
நேரத்துக்கு சாப்டுட்டு
எங்க கிளம்புரிங்க ?
என தொண்டைக்கு
செல்லுமுன் ஒரு
சொல்
மதிய வேளையில்
மல்லாந்து படுத்திருக்கையில்
'கிழம்' இங்கேயே
படுத்திருக்கு என
மருமகளின் வசைப்
பாட்டு
எங்க வீடு
வெளிய போ
என்பது பேரன்களின்
வழி வந்த
எம் பிள்ளையின்
உத்தரவு
தனிமை தாகத்தால்
பெற்ற பிள்ளையிடம்
பேச நேரம் கேட்குமவலம்
இருப்பினும் உரையாட
உந்தும் நாக்கு
பேச நேரமில்லையென
போனில் பேசிக்கொண்டே
கையசைப்பான்
இறந்துகிடந்த என்
இடப்புறம்
இன்சூரன்சு பணம்
இன்னும் வரவில்லையென
கடிந்து கொண்டிருந்தான்
ஈ மொய்க்கும்
என் முகத்தைப் பார்த்து
எந்தந்தைக்கு யான்
தந்த வலி
உணர்த்தும்
இறந்த பின்
எமக்கு வடியும்
கண்ணீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக