தூங்கும் விழி
தாங்கும் முகம்
பார்த்து தொண்டைதனை
யடைக்கும் துக்கம்
திக்கும் துயர
நிலை
கை பொத்தி
வாய் மூடியும்
கண்ணீர் இமையணை
தாண்டி கால்களில்
பட்ட சூடுணர்ந்து
கரங் கொண்டு
கண் தோய்த்து
அரை தூக்கம்
கலைந்து அடுப்படி
தேடுமுன்னிடம்
அம்மா ?
அவளில்லை நானென்று
எவ்வாறுரைப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக