வியாழன், 5 மே, 2022

பிள்ளைக் கனா



 வர்ணங்களை

பிழிந்து 

சாறெடுத்து

அதில் 


வாசனைத்

திரவியங் 

கொண்டு குழப்பி 

ஆற்று நீரைக் 

கிள்ளியெடுத்து அதனோடு

சிறு நட்சத்திரங்களை

 கலக்கி 

குலையும்

மலைகளுக்குருகில் தலைகீழாய் 

மிதக்கும் 

வீட்டின் 

அடுப்படியில் பறக்கும் வர்ணமற்ற

பூனைக்கு 

இவ் வாசனையை 

தீட்ட 

வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக