திங்கள், 30 மே, 2022

தற்கொலை செய்து கொண்ட ஆலமரம்



காற்றோடு பேசி சிரித்துக் 

கொண்டிருந்த இலைகள் 

கட்டிடங்களுக்கு நடுவே

கேட்பாரற்று கிடந்து

மன உளைச்சளுக்களானது 


ஆற்றினருகை அரிமருகன் 

அமர்ந்து விளையாடி

அருள்  தந்தது போய் 

ரோட்டோரம் 

புகைகளையும் புழுதிகளையும் 

உண்டு புற்று நோய் 

வந்திருந்தது 


குழந்தைகள் விழுதுகளில்

தொங்கி விளையாடி 

பின் அயர்ந்தமர்ந்து

கட்டிப்பிடித்து விளையாடி 

ஆறுதல் சொல்ல கூட 

ஆளற்ற ஆலமரம் 


சொந்த பந்தங்களான 

குருவிகளின் 

கூடுகளற்ற கிளைகளால் 

அனாதையாக்கப்பட்ட 

ஆலமரம் 


சுட்ட பழம் 

சுடாத பழம் 

என்றில்லாமல் அனைத்தும் 

சிமெண்ட் தரையில் 

வீழ்ந்து நசுக்கப்பட்டு 

நன்மையற்றுப் போனதையெண்ணி 

நாளுக்கு நாள் 

மெலிந்து போனது   


வெட்டும் மின்னலைப் 

பிடித்து 

தானே 

தற்கொலை செய்து 

கொண்டது 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக