
வேகம்
நிறைந்த
வயதில்
பண
மரம்
வளர்ப்பதிலே
சென்றது
மன மதை
மதிக்க
கூடவில்லை
வேகங்கள்
குறைந்த
வயதில்
பணமது
உதிர்த்து
பட்ட
மரமானபோது
பெற்ற
பிள்ளைகள்
கூட
பக்கமில்லை
இளைப்பார
இடந்தேடி
அலைகையில்
இதுவரை
ஒரு நற்விதைக்
கூட விதைக்காததன்
விளைவு
விழைகிறது
மண்ணிடமும்
மனிதத்திடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக