யாருமற்ற கேள்விக்கு
நீண்ட இரவு பதில்
ஒளியில்லா சொல்லைக்
கேட்டுணர்ந்து
விடை யவரளிப்பார்
கண்மூடிக் காட்டும்
திசையை யார்கண்டு
உன்னோடு பயணப்பட
யவர் வருவார்
அப்படியே
பயணித்தாலும்
கொண்டு சென்ற
உள்ளத்தின் உள்
வெளி பேதங்கண்டு
உதறிய கைகளை
ஒருபோதும்
நாடி நடவாத கால்
கொண்ட யாவும்
காரணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக