வெயில் மழை
பாராது
ரோட்டோரம்
குடைப் பிடித்துக்
கொண்டிருக்கும்
மரத்தினடியில்
உடைந்த
நிழல்களோடு
உரையாடி
உள்மனதை
கண்ணீரிலிருந்து
வெளிக்காற்றில்
உலர்த்தும்
யாரோ ஒருவனில்
அவன் நான்
என் பிம்பத்தைக்
கண்ட பின்
இரவி-யின் இரு
அம்புகள்
தீண்டிச்செல்ல
கடக்க எத்தனித்து
தேங்கி நிற்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக