tamil wedding லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil wedding லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 மே, 2022

துளிக் கறுமை

 


உதட்டோரம் கசிந்த 

சிரிப்பு நழுவி 

கன்னக் குளத்தில் 

விழுந்ததும் 


சுட்டு விரல் 

கொண்டு கண்ணடி

கறுமைத் தொட்டு 

கலந்ததில் 


பேனா முனைத் 

தொட்டெழுதிய 

எழுத்துக்களுக்கும் 

கிறுக்குப் பிடித்து 


இடமாறி இடறி 

சொல்லும் பொருளும் 

அவளதரமும் அதன் 

நகையுமாகி 

நாம சங்கீர்த்தனமாகியது 


அக்கருமை

கனந்தாங்காது  

காகிதத்துக்கும் 

மயக்கம் வந்து 

கன மேசையடியில் 

கிடத்திய 


பின் 

தரணி 

தலை 

சுற்றியது  

வியாழன், 12 மே, 2022

மஞ்சக்கயிறு


 


குயில்களின் 

கானத்தை 

கையிறாகத்

 திரித்து 


மாலையது 

மதியின் 

மஞ்சளொளில் 

தோய்த்தெடுத்து 


மழலைக் குரல் 

கொண்ட 

மங்கையவள் 

செங்கழுத்தில் 

படரவிட்டு 


காதலென்ற 

மூன்றெழுத்து 

கொண்டு 

முடிந்து 

விட வேண்டும்