ஞாயிறு, 25 அக்டோபர், 2020

குறைசேய் நிறைத்தாய்


மெய் குறையுண்ட சேயாயினும்வாஞ்சையோடு வார்த்தெடுத்தவள்

உறவினர் எதிர்க்கையில் உறவறத்து உடனிருந்தவள்

உடன்பிறந்தோர் இகழ்கையில் உளமாற ஊக்கமளித்தவள்


குறை கண்டு விலகி குறுகிய போதெல்லாம்



அதுகண்டு அளப்பற்ற அன்பளித்து அரவணைத்தவள்


இக்குறைவிலுள்ள நிறைவையண்ணி மகிழ்வதா


அக்குறைவால் எந்தாயை நிறைவுற முடியாததையண்ணி வருந்துவதா


இத்தாயை எனக்களித்த இறைவனை வாழ்த்துவதா


இத்தாய்க்கு எனையளித்த இறைவனை வீழ்த்துவதா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக