கரு மேகக்கூட்டங்கள் கரைந்தோடி கொண்டிருக்க..
குளிர்காற்று உன் கூந்தல் தழுவ
அதில் சில என் கன்னமும் தடவியது..
மழை முதல் வருமென உன் மாராப்பு சரி செய்ததில் சற்றே திளைத்திறந்தேன்..
வராத வருணனுக்கும் கணுக்கால் வரை ஆடையேந்தி கால்கொலுசினூடே வழிகாட்டி
தத்தித்தாவி கொக்கென பறந்து ஒற்றைக்காலில் தவம்புரியும் மரம் சென்று திரும்பி பார்த்து திகைத்து நின்று கண்ணாலேயே கலகம் செய்து
காதோரம் உரையாட
என் கால்தடம் பற்றி வருவாயாயென நீ சிணுங்கியதில் சிலிர்த்துத்தான் போனேன் மழை வாராமலே..
தூர விழுந்த தூரலில் வரைந்த வானவில்லின் வண்ணம் தேய்த்து
கிட்ட வந்ததும் எட்ட பறந்த வண்ணத்துப்பூச்சியாய் நீ படர எட்டியணைத்து தொட்டுப்பிடித்து வண்ணமெல்லாம் வாங்கிக்கொள்ளும் முனைப்பில் பருவ வயது பாலகனாய் உனை தொடர..
தேன் தேடி பூ மீதமர நெற்றிப்பொட்டில் இட்ட முத்த சத்தத்தில் முற்றிலும் பொழிந்தது மேகம்.
நிகழந்தயாவும் நிஜமாகி நினைவாகி கனவாகிய போதும்..
காலங்கடந்து கரை சேர்ந்து நடை தளரந்து நரை கூடிய வயதிலும் உன் விரல் தீண்டும்பொழுதெல்லாம் உள்ளூர ஆசை ஊற்றெடுக்கத்தான் செய்கிறது உமையவளே..என் செய்வேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக