தெருவோரம் வீற்றிருக்கும் பச்சை தேவதைகள்
நின்றவர்க்கு நிழல் தரும்
அமர்ந்தவர்க்கு அருள் தரும்
குருவிகள் கூடுகட்ட இடம் தரும்
கொத்தித்தின்ன பழமும் தரும்
வியர்த்து வந்தவர்க்கு வீசும்
காற்றில் சிலிர்ப்பு தரும்
சில்லுக்காற்றில் சீட்டியடித்து
வெள்ளி மழை விருந்து தரும்
நச்சுக்காற்றை யவள்ளுளித்து
நற்காற்றை நமக்கு வீசுவாள்
கிழவிக்கு முன்னில் கடைதருவாள்
கிழவனுக்கு மறைவில் மூக்குப்பொடி தருவாள்
காதலர்களின் பெயர்களை சுமப்பாள்
மரப்பட்டை மருந்து தருவாள்
பட்டுப்'போன' பிறகும் விறகு தருவாள்
- வளரும் பச்சை தேவதைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக