வெள்ளி, 30 அக்டோபர், 2020

முதிர்ச்சி

காதலின் முதிர்ச்சி

கண்களில் தெரியும்

வார்த்தைகள் குறையும்

மெளனமும் நிரம்பி வழியும்…

செவ்வாய், 27 அக்டோபர், 2020

பச்சை தேவதைகள்


தெருவோரம் வீற்றிருக்கும் பச்சை தேவதைகள்

நின்றவர்க்கு நிழல் தரும்

அமர்ந்தவர்க்கு அருள் தரும்

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

குறைசேய் நிறைத்தாய்


மெய் குறையுண்ட சேயாயினும்வாஞ்சையோடு வார்த்தெடுத்தவள்

உறவினர் எதிர்க்கையில் உறவறத்து உடனிருந்தவள்

உடன்பிறந்தோர் இகழ்கையில் உளமாற ஊக்கமளித்தவள்


குறை கண்டு விலகி குறுகிய போதெல்லாம்