பலவருட நீர்வற்றா
ஏரியை வளைத்துப் பிடித்து
வண்டி வைத்து
நீரை உறிஞ்சியெடுத்து
மழைநீர் தேங்காமலிருக்க
மண்ணது யெடுத்து
விற்றவரை இலாபமென
ஏரியை வற்றவைத்து
வற்றியது ஏரி
வரலாம் குடியேறி யென
அரசுக்கு ஆணையிட்டு
அதற்கு கையூட்டுமிட்டு
கைம்மாறாக கையெழுத்திட
நிலம் பிரித்து
விளம்பரம் வைத்து
விற்ற பின்னர்
விண்ணை முட்டும்
கட்டடம் யெளுப்பி
அதையும் விற்றோம்
அடுக்குமாடி கலாச்சாரம்
ஏரிகளின்'பால்' நாம் செய்யும்
விபச்சாரம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக