ஒவ்வொரு மரத்துக்கு
வனமும்
வனத்துக்கு
ஒவ்வொரு மரமும்
அங்ஙனம்
உள்ளிருக்கும் ஆண்களுக்கு
ஒவ்வொரு பெண்ணும்
வெளியிருக்கும் பெண்களுக்கு
ஒவ்வொரு ஆணும்
பாதுகாவலன்
ஒவ்வொரு மரத்துக்கு
வனமும்
வனத்துக்கு
ஒவ்வொரு மரமும்
அங்ஙனம்
உள்ளிருக்கும் ஆண்களுக்கு
ஒவ்வொரு பெண்ணும்
வெளியிருக்கும் பெண்களுக்கு
ஒவ்வொரு ஆணும்
பாதுகாவலன்
உச்சி வெயிலில்
ஓட்டுப் பிளவில்
கதிர் வாளை
பாய்ச்சினான்
நீண்ட நேர்த்தியான
செம்பழுப்பில்
பழுக்கக் காய்ச்சிய
வாள் அது!
நல் வேளையாக
நகர்த்திவிட்டேன்
குழந்தையை
இல்லையேல்
நெஞ்சினில் நேரே
இறங்கியிருக்கும்
கடிந்து கொண்டேன்
கதிரவனை..
அசையா ஆலமரத்திலிருந்து
முதிர்ந்த இலையொன்று
உதிர்ந்து
மரத்துக்கடியில் இருக்கும்
குளத்தின் மரத்தில்
கலந்து
குளத்தோடு சேர்த்து
மரத்தையும்
அசைத்ததாய்
நிம்மதி யடைந்து
நிறைவற்ற நித்திரைக்கு
நீந்திச்
செல்கிறது
ஆறுதலுக்கு கூட
அசையவில்லை
அசையா ஆலமரம் !