சாப்பிடுவதற்கு ஏதுமற்ற
சமையலறையில்
நிர்வாணமாய்
கிடக்கும்
பாத்திரங்கள்
ஆணிகளற்ற சுவற்றில்
தொங்க விடப்படாத
கடவுள் படங்கள்
தரையிலிருக்கும்
மின்விசிறி
அழுக்கான
துவைத்த
துணிகள்யாவும்
சாதி பேதமின்றி
ஒரு மூட்டையில்
துயில
எலியால் வாடும்
பசிக்கு
பூனை
என்ன செய்யும்
அதுபோல புதுவீட்டில்
வாடகைக்கு
புகுந்த நான்
செய்வதறியாது
உழன்று
கொண்டிருக்கிறேன்