பிரிந்து விட வேண்டும்
உன்னை
ஓரலைக்கும் மற்றொரு
அலைக்குமான தூரக்
கணங்கள்
மட்டும்!
மழை பெய்து
முடித்த பின்னும்
வளர்ந்து வளைந்த
புற்செடிகள்
தென்றலின் உதவியால்
துளித் துளியாக
மழையை ஊட்டிவிட்டுக்
கொண்டுதானிருக்கிறது
ஓடைக்கு !