சனி, 8 நவம்பர், 2025

இரவல் கனவு

 இறந்தவர்களின் இரவுகளை 

இரவல் கொடுக்கும் தொழில் 

யாருக்கு ?


அந்த இரவுகள் 

குட்டி போடும் 

கனவுகளை சுமக்க 

நான் யார் ?


இலக்கில்லா எனக்கு 

இரவில் தெரியும் 

இந்த பாதை 

ஏற்புடையதா ?


இருப்பினும் எழுந்து நடந்து 

இலக்கையடைந்த பின் 

நட்சத்திர வாசலில் 

நாற்காலி போட்டு 

வாழ்க்கை 

கேட்ட கேள்வி ?


இலக்கின் நோக்கம் 

என்ன ?


உண்மையறியாது 

ஊமையாகி 

உள்ளேயும் 

செல்லமுடியாமல் 


இரவல் வாங்கியது 

எனக்கூறி இனி 

திரும்பியும் செல்ல 

முடியாமல் 


கடைசி நிறுத்தத்தில் 

நின்று கொண்டிருக்கிறேன்